/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பயிர்களை சேதப்படுத்திய யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு
/
பயிர்களை சேதப்படுத்திய யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு
பயிர்களை சேதப்படுத்திய யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு
பயிர்களை சேதப்படுத்திய யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு
ADDED : ஜூன் 11, 2025 02:24 AM
தளி, தளி அருகே, பயிர்களை சேதப்படுத்தி வந்த, 10க்கும் மேற்பட்ட யானைகள், கர்நாடகா வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட தளி காப்புக்காட்டில், 14க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டிருந்தன. இவை, இரவில் தனித்தனி குழுக்களாக பிரிந்து, வனத்தை ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வந்தன. குறிப்பாக, கீஜனகுப்பம், தாசரப்பள்ளி, தேவரபெட்டா, கும்மாளம் உட்பட பல்வேறு கிராமங்களில், மா உள்ளிட்ட பல வகை பயிர்கள் சேதமாகின. அதனால். இழப்புகளை சந்தித்த விவசாயிகள், யானைகளை கர்நாடகா வனத்திற்கு விரட்ட கோரிக்கை விடுத்தனர்.
நேற்று காலை, தளி அடுத்த கொட்டப்பாலம் பகுதியில் முகாமிட்டிருந்த, 14க்கும் மேற்பட்ட யானைகளை, கர்நாடகாவிற்கு பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியில், ஜவளகிரி வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டனர். இரு குழுக்களாக யானைகள் பிரிந்த நிலையில், 10க்கும் மேற்பட்ட யானைகள் மட்டும், கர்நாடகா மாநில எல்லையான ஒட்டர்குப்பம் வனப்பகுதிக்கு சென்றன. இதில், 4க்கும் மேற்பட்ட யானைகள், தளி காப்புக்காட்டிற்கு சென்றன. விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த யானைகளில் ஒரு குழு, கர்நாடகாவிற்கு சென்றதால், விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.