/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கார் சக்கரத்தில் சிக்கி குட்டி நாய் பலி மற்றொரு குட்டியை தத்தெடுத்த ஊழியர்
/
கார் சக்கரத்தில் சிக்கி குட்டி நாய் பலி மற்றொரு குட்டியை தத்தெடுத்த ஊழியர்
கார் சக்கரத்தில் சிக்கி குட்டி நாய் பலி மற்றொரு குட்டியை தத்தெடுத்த ஊழியர்
கார் சக்கரத்தில் சிக்கி குட்டி நாய் பலி மற்றொரு குட்டியை தத்தெடுத்த ஊழியர்
ADDED : டிச 30, 2024 02:49 AM
ஓசூர்: ஓசூரில், கார் சக்கரத்தில் சிக்கி குட்டி நாய் ஒன்று பலியான நிலையில், மன்னிப்பு கேட்ட தனியார் நிறுவன ஊழியர், மற்-றொரு குட்டியை தத்தெடுத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அன்னை நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான, 34 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த, 27 காலை அப்பகுதியில் காரில் சென்றார்.
அப்போது சாலையில் தெருநாய் ஒன்று தன் இரு குட்டிகளுடன் படுத்து கிடந்தது. கார் வருவதை பார்த்த தாய் நாய், ஒரு குட்டி சாலையில் இருந்து ஓடி விடவே, மற்றொரு குட்டி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது. இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த, 'சிசி-டிவி' கேமராவில் பதிவானது.
இதை கைப்பற்றிய, ஓசூர் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர், குட்டி நாயை காரை ஏற்றி கொன்ற தனியார் ஊழியரிடம் விசாரித்-தனர். அப்போது அந்த நபர், தான் காரை ஓட்டி சென்ற போது, தாய் நாயுடன் ஒரு குட்டி மட்டுமே இருந்ததாக நினைத்து ஹாரன் அடித்ததாகவும், இரு நாய்களும் ஓடி விட்டதாக நினைத்து காரை ஓட்டி சென்ற போது, குட்டி நாய் படுத்திருந்தது தெரியாமல் அதன் மீது ஏற்றி விட்டதாக வாக்குமூலம் அளித்தார்.
மேலும் அவர், ஒரு குட்டியை இழந்த தாய் நாய்க்கு தேவையான பராமரிப்பு செலவை ஏற்பதாகவும், விபத்தில் தப்பிய மற்றொரு குட்டி நாயை தத்தெடுத்து கொள்வதாகவும் தெரிவித்தார். இது குறித்து, பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர், கால்நடை பராம-ரிப்புத்துறை மண்டல இணை இயக்குனரிடம் நடந்த விபரங்-களை கூறினர். பின் அனைவரும் ஆலோசித்து, தனியார் ஊழியர் மீது போலீசில் புகார் கொடுத்து தண்டனை பெற்று கொடுக்கும் முடிவை நிறுத்தி வைத்தனர்.
அவரிடம் இருந்து எழுத்துப்பூர்வமான அறிக்கை மற்றும் வருத்தம் தெரிவித்த வீடியோவை, பிராணிகள் வதை தடுப்பு சங்-கத்தினர் பெற்றுக் கொண்டனர். தனியார் ஊழியர் உறுதியளித்தப்-படி, குட்டி நாயை தத்தெடுத்து, தாய் நாய்க்கான பராமரிப்பு செலவு செய்வதை, பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர் கண்கா-ணிக்க முடிவு செய்துள்ளனர்.

