/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
/
கிருஷ்ணகிரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : செப் 18, 2025 01:19 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரியில் நாளை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (19ம் தேதி) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாம் காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும்.
முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி முதல், பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள், பொறியியல், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் என, அனைத்து வித கல்வித்தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.
எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343 -291983 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.