/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நகராட்சி பள்ளி அருகே ஆக்கிரமிப்பு
/
நகராட்சி பள்ளி அருகே ஆக்கிரமிப்பு
ADDED : ஜூலை 01, 2025 01:11 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே கடந்த, 13 ஆண்டுகளுக்கு முன், நம்ம டாய்லெட் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பராமரிப்பின்றி கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது.
ஆனால், அதற்காக அமைக்கப்பட்ட மேடான பகுதி, கல்வெட்டு, சோலார் மின்கம்பம் ஆகியவற்றை அகற்றாமல் உள்ளனர். இதனால் இங்கு குப்பை கொட்டப்பட்டும், இயற்கை உபாதைகள் கழிக்கும் இடமாகவும் மாறியதால், மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்.
இங்கு ஏற்கனவே, ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட்டு வந்த நிலையில், நம்ம டாய்லெட் அமைத்த பின், அருகே உள்ள இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தி வருகின்றனர். மேலும் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக உள்ள இப்பகுதியில், போக்குவரத்திற்கு இடையூறாகவும், ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க இடமின்றியும், ஆக்கிரமிப்பில் இந்த இடம் உள்ளது. எனவே, போக்குவரத்திற்கு இடையூராக உள்ள, சுகாதார வளாகம் கட்ட அமைக்கப்பட்ட மேடான பகுதியை அகற்ற, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.