/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயற்கை முகாம்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயற்கை முகாம்
ADDED : மார் 31, 2025 02:00 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில், சுற்றுச்-சூழல் பாதுகாப்பு இயற்கை முகாம், ஜீனுார் மற்றும் பையூர் தோட்டக்கலை கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதன் துவக்க விழா கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்-தது.
முகாமை சி.இ.ஓ., (பொ) முனிராஜ் மற்றும் சுற்றுச் சூழல் ஒருங்-கிணைப்பாளர் தீர்த்தகிரி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் பங்கேற்ற, 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும், 10 ஆசிரியர்களுக்கு, டீ சர்ட் மற்றும் தொப்பி ஆகியவை வழங்கப்பட்டன. பின்னர், ஜீனுார் மற்றும் பையூர் தோட்டக்கலைத்துறை பண்-ணைக்கு சென்றனர். அங்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என வலியு-றுத்தப்பட்டது. மேலும், தோட்டக் கலைத்துறை சார்பில் மரக்கன்-றுகள் வளர்ப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரி-சுகள் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.