/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
14ல் கிருஷ்ணகிரி வரும் இ.பி.எஸ்., அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
/
14ல் கிருஷ்ணகிரி வரும் இ.பி.எஸ்., அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
14ல் கிருஷ்ணகிரி வரும் இ.பி.எஸ்., அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
14ல் கிருஷ்ணகிரி வரும் இ.பி.எஸ்., அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : நவ 12, 2024 01:17 AM
கிருஷ்ணகிரி, நவ. 12-
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், இ.பி.எஸ்., வருகை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், வரும், 14ல் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு வரும் வருகை தரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு சப்பாணிப்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். 2026ல் இ.பி.எஸ்., தலைமையில் ஆட்சி அமைக்க, 4 மாதங்களுக்கு ஒரு முறை ஒன்றிய, நகர, பேரூர் கிளை சார்பில் கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம், துணைச்செயலாளர் ஷாகுல் அமீத், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், முன்னாள் எம்.பி., பெருமாள், நகர செயலாளர் கேசவன், ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.