/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாயிகளின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும் ஓசூரில் இ.பி.எஸ்., உறுதி
/
விவசாயிகளின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும் ஓசூரில் இ.பி.எஸ்., உறுதி
விவசாயிகளின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும் ஓசூரில் இ.பி.எஸ்., உறுதி
விவசாயிகளின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும் ஓசூரில் இ.பி.எஸ்., உறுதி
ADDED : ஆக 13, 2025 05:27 AM
ஓசூர்: ''விவசாயிகளின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்-படும்'' என, ஓசூரில் இ.பி.எஸ்., பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், 'மக்களை காப்போம், தமிழ-கத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விவசாயிகளுடன் கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர்களிடம் அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கிய நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பின், தொடர்ச்சியாக கிடைக்கவில்லை என, விவசாயிகள் வருத்தப்படுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், விவசாயத்திற்கு, 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். யானை நட-மாட்டத்தை தடுக்க, வேலி அமைப்பது, அகழி வெட்டுவது போன்ற பணிகள் கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்-டன.
இப்போது, அதன் நிலை என்னவென்று தெரியவில்லை. அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் யானை நடமாட்டம் அதிக-முள்ள பகுதிகளில், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகளால் தாக்கப்பட்டு இறப்பவர்கள், குடும்பத்திற்கு நிவாரண நிதி உயர்த்தி வழங்கப்படும். மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலை அமைப்பது குறித்து,
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் பரிசீலனை செய்வோம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மலர் உற்பத்தி செய்யும் விவசாயி-களுக்கு, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். பல்வேறு மானியங்களை கொடுத்தோம். இப்போது அந்த மானியங்கள் கிடைக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் நடவ-டிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறி-களை விற்க, மத்திய அரசுடன் இணைந்து, 20 கோடி ரூபாய் மதிப்பில், 10 மாவட்டங்களில் திட்டம் கொண்டு வந்தோம். அதுவும் இந்த ஆட்சியில் கைவிடப்பட்டுள்ளது.
நம் பகுதி விவசாயிகளுக்கு கலப்பின மாடுகளை கொடுப்ப-தற்கு, பிரம்மாண்டமான கால்நடை பூங்கா அமைத்தோம். ஆடு, கோழி வளர்ப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும் இத்திட்-டத்தை கொண்டு வந்தோம். எனக்கு விவசாயம் தான் பிரதான தொழில். விவசாயம் செய்வதில் இருக்கும் கஷ்ட, நஷ்டங்கள் எனக்கு தெரியும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுப்பது தான், எங்கள் முக்-கிய பணியாக இருக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.