/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மலைக்கோவிலில் இ.பி.எஸ்., சுவாமி தரிசனம்
/
ஓசூர் மலைக்கோவிலில் இ.பி.எஸ்., சுவாமி தரிசனம்
ADDED : ஆக 13, 2025 05:28 AM
ஓசூர்: ஓசூர் மலைக்கோவிலில் நேற்று, அ.தி.மு.க., பொதுச்-செயலாளர் இ.பி.எஸ்., சுவாமி தரிசனம் செய்தார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, ஓசூர், தளி, வேப்பனஹள்ளி ஆகிய, 3 சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., 'மக்களை காப்போம், தமிழ-கத்தை மீட்போம்' என்ற பிரசார சுற்றுப்பயணத்தை, 2 நாட்கள் மேற்கொண்டார்.அதன் ஒரு பகுதியாக, ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உட-னுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், நேற்று காலை இ.பி.எஸ்., சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு, பூரண கும்ப மரியாதையுடன் பரிவட்டம் கட்டி, ஹிந்து சமய அறநிலையத்து-றையினர் கோவிலுக்குள் அழைத்து சென்றனர். அங்கு மூலவர் சந்-திரசூடேஸ்வரர் மற்றும் மரகதாம்பிகை அம்மன் மற்றும் பிற தெய்வங்களை இ.பி.எஸ்., வழிபட்டார். அதன் பின் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு இ.பி.எஸ்., அன்னதானம் வழங்கினார்.
அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி., மாவட்ட செய-லாளர்கள் பாலகிருஷ்ணாரெட்டி அசோக்குமார், அன்பழகன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பன்னீர்செல்வம், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன் உட்பட பலர் உடனிந்-தனர்.
ஓசூர் மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரரை வழி-பட்டால், தீமைகள் விலகி நன்மைகள் கிடைப்பதுடன், எதிரிகள் தொல்லை விலகும். மேலும் நினைத்தது நிறைவேறும். வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. வரும், 2026ல் தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில் இ.பி.எஸ்., உள்ளார். பா.ஜ., கூட்டணியில் சேர்ந்துள்ளதால், எப்படியும் வெற்றி கிடைத்து விடும் என, இ.பி.எஸ்., தரப்பு நம்புகிறது. சந்திரசூடேஸ்வரர் கோவிலில் வழிபட்டால், வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில், இ.பி.எஸ்., சுவாமி தரிசனம் செய்ததாக, கட்சியினர் தெரிவித்தனர்.-