/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சர்வதேச சிலம்ப போட்டி ஏட்டு மகளுக்கு தங்கம்
/
சர்வதேச சிலம்ப போட்டி ஏட்டு மகளுக்கு தங்கம்
ADDED : நவ 09, 2025 02:30 AM

தேன்கனிக்கோட்டை: சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில், தலைமை காவலரின் மகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சேலம் மாவட்டம், கொங்குபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 45. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில், தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பத்மஸ்ரீ, 17; கிருஷ்ணகிரியில் உள்ள விஜய் வித்யாலயா பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.
இவர், 7 வயதில் இருந்தே சிலம்பம் கற்று வருகிறார். மாநில போட்டிகளில் பங்கேற்று, 4 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
அதேபோல், கேரளாவில் செப்., மாதம் நடந்த தேசிய அளவிலான போட்டியில், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றார்.
மாவட்ட அளவில் சமீபத்தில் நடந்த, முதல்வர் கோப்பைக்கான போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதுவரை இவர், 50க்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் 15க்கும் மேற்பட்ட வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
நேபாள நாட்டில் கடந்த, 6 மற்றும் 7ம் தேதிகளில் நடந்த சர்வ தேச அளவிலான போட்டியில், சீனியர் பிரிவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு, பெற்றோர் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

