/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓய்வூதிய குறைகளை 'வாட்ஸாப்'பில் முன்னாள் படைவீரர்கள் தெரிவிக்கலாம்'
/
ஓய்வூதிய குறைகளை 'வாட்ஸாப்'பில் முன்னாள் படைவீரர்கள் தெரிவிக்கலாம்'
ஓய்வூதிய குறைகளை 'வாட்ஸாப்'பில் முன்னாள் படைவீரர்கள் தெரிவிக்கலாம்'
ஓய்வூதிய குறைகளை 'வாட்ஸாப்'பில் முன்னாள் படைவீரர்கள் தெரிவிக்கலாம்'
ADDED : நவ 07, 2024 12:57 AM
ஓய்வூதிய குறைகளை 'வாட்ஸாப்'பில்
முன்னாள் படைவீரர்கள் தெரிவிக்கலாம்'
கிருஷ்ணகிரி, நவ. 7-
கிருஷ்ணகிரியில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களிலுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு, 'ஸ்பர்ஸ்' பாதுகாப்பு ஓய்வூதிய குறைதீர் முகாமை, மாவட்ட கலெக்டர் சரயு துவக்கி வைத்து பேசியதாவது:
வேலுார் மாவட்டத்திற்கு அடுத்த படியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அதிக நபர்கள் ராணுவத்தில் பணியாற்றுகின்றனர். நம் நாட்டிற்காக பணியாற்றிய முன்னாள் படைவீரர்களுக்கு, அவர்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை களைய குறைதீர் கூட்டம் முக்கியம். மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை, 88073 80165 என்ற வாட்ஸாப் எண்ணில் தெரிவித்தால், அதற்கான தீர்வை, அலுவலர்கள் தெரிவிப்பர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு, 'ஸ்பர்ஸ்' சேவை மையம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில், இறப்பு சான்றிதழ் கிடைத்த, 48 மணி நேரத்திற்குள், குடும்ப ஓய்வூதிய ஆணை வழங்கப்படும். பிற ஓய்வூதியம் சார்ந்த குறைகள், ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இம்முகாமில், 1,050-க்கும் மேற்பட்ட முப்படை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர். ஓய்வூதியதாரர்களின் குறைகள் மீது, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓய்வூதிய நிலுவை தொகையாக, 15 லட்சம் ரூபாய் அளவிற்கு காசோலைகள் வழங்கப்பட்டன.
சென்னை மண்டல பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டு இயக்குனர் ஜெயசீலன் ஐ.டி.ஏ.எஸ்., ராணுவ கோவை மண்டல நிர்வாக நிலைய கர்னல் முரளிதரன், முன்னாள் படைவீரர் நலத்துறை துணை இயக்குனர் கர்னல் (ஓய்வு) வேலு, முன்னாள் படைவீரர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.