/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிளாஸ்டிக் நிலப்போர்வை பயன்பாடால் பயிர் பாதிப்படைவதை தடுக்க விளக்கம்

ADDED : மே 31, 2024 03:42 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் தாலுகா தேன்கனிக்கோட்டையில் உள்ள வேளாண் அலுவலகத்தில், வேளாண் உதவி இயக்குனர் ஜான்லுார்து சேவியரிடம், அதியமான் வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியின், 4ம் ஆண்டு மாணவர்கள், 11 பேர், விவசாயிகளிடம் உள்ள பிரச்னையாகிய பிளாஸ்டிக் நிலப்போர்வை பயன்படுத்துவதன் மூலம், இளம்நிலை பயிர் பாதிப்படைவதை பற்றி விளக்கம் கேட்டனர். அதற்குரிய தீர்வாக, ஈரத்தை காப்பதற்கான ஈர வைக்கோல், தழைக்கூளம் பயன் படுத்துவதன் மூலம், பயிர் சேதத்தை தவிர்க்கலாம் என வேளாண் உதவி இயக்குனர் விளக்கினார்.
வேளாண் அலுவலகத்திற்கு திடீர் ஆய்விற்கு வந்த வேளாண் துணை இயக்குனர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜமோகன், உழவர் பயிற்சி நிலையம் பாலசுப்ரமணியம் ஆகியோரிடம் ஆலோசித்த, அதியமான் வேளாண் கல்லுாரி மாணவர்கள், விவசாயிகளிடம் உள்ள பிரச்னையாகிய மண் வளம் பாதிப்படைவதை பற்றி கேட்டனர். அதற்கு தீர்வாக இயற்கை முறையான கோடை உழவு, பசுந்தாள் உரம், பசுந்தழை உரம், உயிர் உரம் மற்றும் இயற்கை உரம் பயன்படுத்துவதன் மூலம் மண்வள சேதத்தை தவிர்க்கலாம் என, வேளாண் துணை இயக்குனர் எடுத்துரைத்தார்.