/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேளாண் வணிக அலுவலகத்தில் ஏற்றுமதி ஆலோசனை மையம்
/
வேளாண் வணிக அலுவலகத்தில் ஏற்றுமதி ஆலோசனை மையம்
ADDED : செப் 06, 2025 12:57 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
வேளாண், வேளாண் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர், வேளாண் வணிக அலுவலகத்தில் ஏற்றுமதி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகளாவிய சந்தை வாய்ப்புகள் குறித்த தகவல்கள், ஏற்றுமதி நடைமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்படும். ஏற்றுமதியில் ஆர்வம் உள்ள விவசாயிகள், சிறு வேளாண் வணிகர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆகியோர் ஏற்றுமதியாளர்களாக உருவாக்கப்படுவர்.
இது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும். மேலும் விபரம் பெற, வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்), ஒழுங்குமுறை விற்பனை கூடம், எண்.57, அம்சா உசைன் தெரு, புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 94430 81440 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.