/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நெற் பயிருக்கு காப்பீடு கால அவகாசம் நீட்டிப்பு
/
நெற் பயிருக்கு காப்பீடு கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஆக 14, 2025 01:34 AM
கிருஷ்ணகிரி, நெல் பயிருக்கு காப்பீடு செய்ய, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொ) காளிமுத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்புக்கு ஈடு செய்து வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில், பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கு விவசாயிகள் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம், பதிவு செய்யலாம். பூர்த்தி செய்து கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பம், நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை கொண்டு, விவசாயிகள் பதிவு செய்யலாம்.
இத்திட்டத்தின் மூலம், ஏக்கருக்கு நெல்லுக்கு, 444 ரூபாய், சோளம், 202 ரூபாய், ராகி, 232 ரூபாய், மக்காச்சோளம், 576 ரூபாய், துவரை, 340 ரூபாய், பச்சைப்பயறு, 340 ரூபாய், நிலக்கடலை, 440 ரூபாய், பருத்தி, 698 ரூபாய் பிரிமியம் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு செய்ய இன்று (ஆக.14) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சோளம், ராகி, மக்காச்சோளம், துவரை, நிலக்கடலை, உளுந்து, பச்சைப்பயறு பயிர்களுக்கு, 16 வரையும், பருத்திக்கு அடுத்த மாதம், 30 வரையும், காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.