/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
/
கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : ஆக 14, 2025 01:34 AM
தேன்கனிக்கோட்டை, தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, ஒரு கால பூஜை நடக்கும் கோவில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கு நிகராக, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவிலுள்ள கிராமப்புற கோவில்களில் செயல்படுத்தும் வகையில், கிராமப்புற கோவில்களில், 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பூசாரிகள், கிராம கோவில் பூசாரி கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டு, முதற்கட்டமாக,
10 பேருக்கு நேற்று முன்தினம் அடையாள அட்டை வழங்கப்பட்டன.
இதை, தேன்கனிக்கோட்டை ஆய்வாளர் வேல்ராஜ் வழங்கினார். கிராம கோவில் பூசாரிகள் நலவாரியத்தில் சேர, ஆன்லைனில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.