/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பாலிடெக்னிக்கில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
/
அரசு பாலிடெக்னிக்கில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஜூலை 04, 2024 05:57 AM
ஓசூர்: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு வெளியிட்டுள்ள அறிக்கை:இக்கல்லுாரியில், 2024 - 25ம் கல்வியாண்டிற்கு, அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி பொறியியல் மற்றும் கணினி சார்ந்த உற்பத்தி தொழில்-நுட்பம் ஆகிய பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் முத-லாமாண்டிலும், பிளஸ் 2 அல்லது ஐ.டி.ஐ., முடித்த மாணவர்கள் நேரடியாக இரண்டாமாண்டிலும் சேர முடியும்.அரசு பள்ளியில் படித்து, இக்கல்லுாரியில் சேரும் மாணவியருக்கு, புதுமைப்பெண் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாயும், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாயும் வழங்-கப்படும். மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கல்-லுாரியில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி-யாக விடுதி வசதி உள்ளது. இக்கல்லுாரியில் இறு-தியாண்டில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலை-வாய்ப்பு பெற்று தரப்படுகிறது.எனவே, இதுவரை கல்லுாரியில் சேராத மற்றும் உடனடி தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அசல் சான்றி-தழ்கள் மற்றும் புகைப்படத்துடன் நேரில் சென்று சேர்க்கை பெறலாம். மேலும், தொடர்புக்கு, 79045 31623, 90803 20850, 94423 84396, 86102 59959, 97917 22281 ஆகிய எண்களை அழைக்கலாம்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.