/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு முன்பதிவு செய்ய காலம் நீட்டிப்பு.
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு முன்பதிவு செய்ய காலம் நீட்டிப்பு.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு முன்பதிவு செய்ய காலம் நீட்டிப்பு.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு முன்பதிவு செய்ய காலம் நீட்டிப்பு.
ADDED : ஆக 27, 2024 02:27 AM
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு முன்பதிவு செய்ய வரும் செப்., 2 வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்-டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, 5 பிரிவுகளில், 27 விளையாட்டுகள், 53 வகைகளில், மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் வரும் செப்., அக்.,ல் நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள, https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம், உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகை பெறலாம். இதில், 12 முதல், 19 வயது வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கும், 17 முதல், 25 வயது வரை உள்ள கல்லுாரி மாணவர்களுக்கும், 15 முதல், 35 வயது வரை உள்ள பொது பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழி-யர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய கடந்த, 25 கடைசி நாள் என அறிவித்திருந்த நிலையில், தற்போது வரும் செப்., 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை முன்பதிவு செய்யாத-வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.