/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
/
ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
ADDED : ஜன 20, 2024 09:43 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டோல்கேட்டில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. திட்ட இயக்குனர் ரமேஷ் கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார். இதில், அசாதாரண கண் பார்வை கண்டறியப்பட்டு அவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டன. கண்பார்வை பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து வாகனங்களை இயக்காமல், தங்களது கண்களை மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், பாதுகாப்பான பயணத்திற்கு தங்களது ஆரோக்கியத்தை கண்டிப்பாக அனைத்து ஓட்டுனர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய குழுத் தலைவர் தர்செம் சிங், டோல்சாலை மண்டல தலைவர் திவ்யத்யுதி பெரா ஜி, டோல்ரோடு திட்ட மேலாளர் யுவராஜ், வருவாய் மேலாளர் சஞ்சய் மொஹந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.