/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
1,000 மாணவ, மாணவியருக்கு கண் கண்ணாடி வழங்கல்
/
1,000 மாணவ, மாணவியருக்கு கண் கண்ணாடி வழங்கல்
ADDED : நவ 28, 2025 01:10 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தி.மு.க., சார்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கிருஷ்ணகிரி புனித அன்னாள் பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில் கண் பரிசோதனை செய்து, கண் கண்ணாடி போட வேண்டிய, 1,000 மாணவ, மாணவியருக்கு இலவச கண் கண்ணாடியை வழங்கி அவர் பேசுகையில், '
'தற்போது நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில், மாணவர்கள் கண் பார்வை குறைபாடு இருந்தது கண்டறிந்து, மாவட்ட, தி.மு.க., சார்பில், 2,000 பேருக்கு கண் கண்ணாடி வழங்க முடிவு செய்யப்பட்டது. தற்போது, 1,000 மாணவ, மாணவியருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்-.மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், துணை செயலாளர்கள் சாவித்திரி, கோவிந்தசாமி, நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
* மத்துார் பஸ் ஸ்டாண்டில், மத்துார், தி.மு.க., ஒன்றிய செயலாளர் வசந்தரசு தலைமையில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. போச்சம்பள்ளியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில், தி.மு.க.,வினர் பட்டாசுகள் வெடித்து, இனிப்பு, அன்னதானம் வழங்கினர்.
* ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றாம்பட்டி குமரேசன் தலைமை வகித்தார். பர்கூர், எம்.எல்.ஏ.,வும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மதியழகன், 300க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு புடவை, இனிப்பு, பிரியாணி வழங்கினார்.
இதில், மாவட்ட பொருளாளர் கதிரவன், முன்னாள் எம்.எல்.ஏ., நரசிம்மன், கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் செல்வம், ரஜினிசெல்வம், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, நகர செயலாளர் தீபக் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

