/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கத்தில் கோஷ்டி பிரச்னை; காமராஜர் சிலைக்கு தனித்தனியாக மாலை அணிவிப்பு
/
ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கத்தில் கோஷ்டி பிரச்னை; காமராஜர் சிலைக்கு தனித்தனியாக மாலை அணிவிப்பு
ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கத்தில் கோஷ்டி பிரச்னை; காமராஜர் சிலைக்கு தனித்தனியாக மாலை அணிவிப்பு
ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கத்தில் கோஷ்டி பிரச்னை; காமராஜர் சிலைக்கு தனித்தனியாக மாலை அணிவிப்பு
ADDED : ஜூலை 15, 2024 11:51 PM
ஓசூர்: ஓசூரில், ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கத்தில் கோஷ்டி பிரச்-னையால், காமராஜர் சிலைக்கு தனித்தனியாக மாலை அணிவித்-தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ., மனோ-கரன், ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க தேசிய செயலளராக உள்ளார்; மூத்த நிர்வாகியான இவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. ஆனால், தமிழக, ஐ.என்.டி.யு.சி., செயல் தலைவர் மற்றும் டி.வி.எஸ்., மோட்டார் எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவராக உள்ள குப்புசாமி, தனக்கென ஒரு தரப்பு நிர்வாகிகளுடன் செயல்படு-கிறார். கோஷ்டி பிரச்னையால், நிகழ்ச்சிகளில் இவர்கள் ஒன்றாக பங்கேற்பதில்லை.
மனோகரன் உடல்நிலை சரியில்லாமலுள்ள நிலையில், குப்புசாமி தரப்பினர் ஐ.என்.டி.யு.சி.,யில், தங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக கருதி வருகின்றனர். நேற்று முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழாவில், குப்புசாமி தன் ஆதர-வாளர்களுடன், கே.ஏ.பி., திருமண மண்டபத்திலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். அடுத்த சில நிமிடங்களில், மனோகரன் ஆதரவாளரான மாவட்ட பொதுச்செயலாளர் முனிராஜ் தலைமையில் நிர்வாகிகள், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். கோஷ்டி பிரச்னை பெரிதாகி வருவதால், இது தொழிற்சங்கத்தை வலிமையிழக்க செய்யும் நிலையை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து, ஐ.என்.டி.யு.சி., நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'குப்-புசாமியை வளர்த்து விட்ட, தேசிய செயலாளர் மனோகரனை, இன்று அவர் மறந்து விட்டார். டி.வி.எஸ்., நிறுவனத்தில் ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கம் மட்டுமே உள்ளது. டி.வி.எஸ்., மோட்டார் எம்பிளாயீஸ் யூனியன் ஆண்டு விழா, தொழிற்சங்க தேர்தல் என எதற்கும், தேசிய செயலாளர் என்ற முறையில் மனோகரனுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. குப்புசாமி தான், பிரிந்து செயல்படுகிறார்' என்றனர்.