/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி
/
தனியார் பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி
ADDED : அக் 26, 2024 06:34 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே அமுதகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா, 50, விவசாயி; இவர் நேற்று காலை, தோரிப்பள்ளி பட்டாளம்மன் கோவிலுக்கு டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார். பேரிகை-சூளகிரி சாலையில், உருது பள்ளி அருகே வந்த போது, சூளகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி, ஓம் ஸ்ரீ சாய் கிருபா என்ற தனியார் பஸ் அதிவேகமாக சென்றது.
பஸ்சை பார்த்ததும், கிருஷ்ணப்பா பிரேக் பிடித்து மொபட்டை நிறுத்த முயன்றார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழ, பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர். இக்காட்சிகள், பஸ்சில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பஸ் டிரைவர் தர்மே கவுடாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.