/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின் ஊழியர்களின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி விவசாயி பலி: உறவினர்கள் மறியல்

ADDED : டிச 28, 2024 02:59 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், புது மல்லவாடி அடுத்த ஈச்சங்-குப்பம் கிராமத்தில், கடந்த, 20 நாட்களுக்கு முன் விவசாயி விநா-யகமூர்த்தி,45, என்பவரது விவசாய நிலத்தின் வழியாக சென்ற மின்கம்பி அறுந்து விழுந்தது. இதை மின் ஊழியர்கள் அகற்-றாமல், மின்கம்பியை மின்கம்பத்திலிருந்து துண்டித்து அங்கேயே போட்டுவிட்டு சென்றனர்.
இந்நிலையில், நேற்று அதே இடத்தில் மற்றொரு மின்கம்பி அறுந்து, ஏற்கனவே, அறுந்து விழுந்த மின்கம்பி மீது விழுந்து கிடந்தது. இதை அறியாமல், நேற்று விவசாய நிலத்திற்கு சென்ற விநாயக மூர்த்தி, மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி சம்-பவ இடத்திலேயே பலியானார்.
விநாயகமூர்த்தி பலியானதற்கு, மின் ஊழியர்களின் அலட்சியமே காரணம் என கூறி, ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், திருவண்ணாமலை - வேலுார் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். திருவண்-ணாமலை போலீஸ் டி.எஸ்.பி., சதீஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயன்றார். ஆனால், சமரசத்தை ஏற்காமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்-டதால், மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.