/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்மோட்டார்களை விவசாயிகள் பகலில் பயன்படுத்த அறிவுறுத்தல்
/
மின்மோட்டார்களை விவசாயிகள் பகலில் பயன்படுத்த அறிவுறுத்தல்
மின்மோட்டார்களை விவசாயிகள் பகலில் பயன்படுத்த அறிவுறுத்தல்
மின்மோட்டார்களை விவசாயிகள் பகலில் பயன்படுத்த அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 07, 2025 03:43 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
பகலில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான சூரியமின் ஆற்றல் உள்ளது. இதை பயன்
படுத்தி, சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம், பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிக்க முடிகிறது.
மேலும், மற்ற வளங்களை கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும் போது ஏற்படும் மாசுபாட்டின் அளவை குறைக்கவும் முடிகிறது. நம் நாட்டை பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேற்றிடும் நோக்கில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
எனவே, பகலில் அதிக அளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்டுத்த கேட்டுக் கொள்கிறோம். அனைத்து விவசாயிகளும், முடிந்தவரை தங்களது விவசாய மின்-மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப் படுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.