/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நவீன இயந்திரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
/
நவீன இயந்திரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
நவீன இயந்திரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
நவீன இயந்திரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 27, 2025 01:09 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேளாண் துறை மூலம் நெல் குறுவை தொகுப்பு திட்டத்தில், நெல் இயந்திர நடவு குறித்த செயல்விளக்கம், சூளகிரி அடுத்த பாத்தகோட்டா கிராமத்தில் நடந்தது. இந்த செயல்விளக்க முகாமை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தொடங்கி வைத்து
பேசுகையில், ''தற்போது நிலவி வரும் சூழலில், விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதை சமாளிக்க, விவசாயிகள் அனைவரும், நவீன இயந்திரங்களை பயன்படுத்த முன்வர வேண்டும். நெல் நாற்று நடும் இயந்திரத்தை பயன்படுத்துவதன் மூலம், நெல் நடவு செலவை குறைத்து பயன்பெறலாம்,'' என்றார்.
வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன், விவசாயிகளுக்கு இயந்திர நடவு முறையில் நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் குறித்தும், இயந்திர நடவு முறையால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினார். இதில் வேளாண் அலுவர்கள், அப்பகுதியை சேர்ந்த விவசாயி
கள் கலந்து கொண்டனர்.