/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நடப்பு பருவ நெல், பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
/
நடப்பு பருவ நெல், பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
நடப்பு பருவ நெல், பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
நடப்பு பருவ நெல், பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : செப் 22, 2024 05:23 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை வட்டாரத்தில், நடப்பு பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல் மற்றும் பருத்தி பயிரை காப்பீடு செய்யலாம்.
இது குறித்து, ஊத்தங்கரை வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், 2024 -- 25-ம் ஆண்டு காரீப்பருவத்தில் பருத்தி மற்றும் நெல் பயிர்களில் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்கள், பூச்சி, நோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்புக்காக, காப்பீடு தொகையை உரியகாலத்தில் செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட, காரீப்பருவ பருத்தி மற்றும் சம்பா நெல், ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. பருத்தி பயிருக்கு வரும் செப்., 30-ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு, 635 ரூபாய் -மற்றும் நெல் பயிருக்கு வரும் அக்., 31-ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு, 557 ரூபாய் பிரிமியம் தொகை செலுத்தி, பயிர் காப்பீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் கடன் பெறும் மற்றும் கடன் பெற விவசாயிகள், பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்களது பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம்.
பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய, முன்மொழிவு படிவம், சிட்டா, நடப்பாண்டு அடங்கல் அல்லது விதைப்பு சான்றிதழ், ஆதார் அட்டை நகல், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை இணைத்து, உரிய பிரிமியம் தொகையை செலுத்தி, அதற்கான ரசீதை, விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.