/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாகுபடி நிலத்தில் யானை அகழிக்கு எதிர்ப்பு விவசாயிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்

ADDED : நவ 25, 2025 01:32 AM
அஞ்செட்டி, : கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே பூஞ்சோலை, சித்தாண்டபுரம், சீங்கோட்டை ஆகிய கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், அரசு புறம்போக்கு நிலத்தில், பல தலைமுறையாக விவசாயம் செய்து வருகின்றனர்.
அந்த நிலங்களில் வனத்துறையினர் மூலம், யானை அகழிகள் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பூஞ்சோலை கிராமத்தில் இப்பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கிராம மக்களின் பாரம்பரிய விவசாய நிலங்களை பறிக்கும் நோக்குடனும், வனத்துறை செயல்படுவதாக கூறியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், அஞ்செட்டி வட்டக்குழு சார்பில், அகழி தோண்டும் இடத்தில், காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.
வட்ட செயலாளர் குமாரவடிவேல் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர். அங்கேயே சமையல் செய்து சாப்பிட ஏற்பாடு செய்தனர். அஞ்செட்டி வனச்சரகர் கோவிந்தன் பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், மாற்றிடம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.