/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கவிழ்ந்த லாரியிலிருந்து கொட்டிய தக்காளி சேகரித்து சந்தைக்கு அனுப்பிய விவசாயிகள்

ADDED : ஆக 17, 2025 02:15 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை அருகே, பள்ளத்தில் கவிழ்ந்த ஈச்சர் லாரியில் இருந்து கொட்டிய தக்காளியை, சம்மந்தப்பட்ட விவசாயிகள் அள்ளி, சரக்கு வாகனத்தில் ஏற்றி சந்தைக்கு அனுப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பகுதியிலிருந்து, ஓசூர் சந்தைக்கு, 250 பெட்டி களில், தக்காளி லோடு ஏற்றிய ஈச்சர் லாரி ஒன்று நேற்று அதிகாலை புறப்பட்டது. அஞ்செட்டி ராமர் கோவில் பகுதியை சேர்ந்த மணி, 45, லாரியை ஓட்டினார்.
அஞ்செட்டி - தேன்கனிக்கோட்டை சாலையில், குந்துக்கோட்டை அருகே, லாரி ஸ்டேரிங் ராட் துண்டாகி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த தக்காளி லோடு கீழே சரிந்து, பள்ளத்தில் தக்காளிகள் கொட்டின. தகவலின்படி தக்காளி லோடு அனுப்பிய விவசாயிகள் அங்கு வந்து, கொட்டிய தக்காளியை சேகரித்து, மற்றொரு சரக்கு வாகனத்தில் சந்தைக்கு அனுப்பினர். தற்போது, 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி, 1,000 ரூபாய்க்கு சந்தையில் வாங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 40 முதல், 50 ரூபாய் வரை விற்கிறது.