sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சீரான மின்சாரம் வழங்குவதில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

/

சீரான மின்சாரம் வழங்குவதில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

சீரான மின்சாரம் வழங்குவதில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

சீரான மின்சாரம் வழங்குவதில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்


ADDED : அக் 19, 2024 01:21 AM

Google News

ADDED : அக் 19, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீரான மின்சாரம் வழங்குவதில்லை

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

கிருஷ்ணகிரி, அக். 19-

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சரயு தலைமையில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகளின் கேள்விகளுக்கு, அதிகாரிகள் அளித்த பதில்கள் வருமாறு:

விவசாயி ராமகவுண்டர்: தென்னை, மா மரங்களுக்கு சொட்டுநீர் பாசனம் குழாய் திட்டம் செயல்படுத்த அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

கலெக்டர் சரயு: இந்த திட்டம் சாத்தியமில்லை என பதில் வந்துள்ளது. நம் மாவட்ட அளவில் செயல்படுத்த மீண்டும் முயற்சி செய்யப்படும்.

விவசாயி சிவகுரு: மா விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.

தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் குணவதி: பெயர்களை பதிவு செய்தால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

விவசாயி கிருஷ்ணன்: அர்கா-சுப்ரா மேஜிக் விக் விதைகளை தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் வழங்க வேண்டும்.

தொழில்நுட்ப வல்லுனர் (மண்ணியல்) குணசேகர்: எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தை தொடர்பு கொள்ளவும்.

விவசாயி முத்துகுமார்: சிங்காரப்பேட்டை பஞ்., பகுதியில், 2 மாதங்களாக மின்சாரம் சீராக இல்லை. தனியார் நிறுவனத்தில் பணம் வாங்கிக் கொண்டு மின் இணைப்பு வழங்குபவர்கள், விவசாயிகள் கேட்டால் வழங்குவதில்லை.

உதவி செயற்பொறியாளர் ராஜப்பன்: இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி சுந்தரம்: ஜம்பூத்து கிராமத்தில், 4 தலைமுறைகளாக வாழ்கிறோம். பஸ் வசதி இல்லை.

போக்குவரத்து துறை கிளை மேலாளர் வெங்கடேசன்: வழியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, கூட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us