/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கொட்டகைக்கு தீ விவசாயியின் மாடு பலி
/
கொட்டகைக்கு தீ விவசாயியின் மாடு பலி
ADDED : டிச 08, 2024 01:02 AM
கிருஷ்ணகிரி, டிச. 8-
கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறியை சேர்ந்த விவசாயி மாணிக்கம். இவர் வீட்டருகே உள்ள மாட்டு கொட்டகையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். கொட்டகை எரிவதை பார்த்த மாணிக்கம், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து, கொட்டகையில் கட்டியிருந்த மாடுகளை மீட்டார். தீ விபத்தில் ஒரு மாடு தீயில் கருகி இறந்த நிலையில், 2 மாடுகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. கொட்டகைக்கு தீ வைத்தது தொடர்பாக, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணிக்கத்திற்கு ஆறுதல் கூறி, கிருஷ்ணகிரி மாவட்ட தமிழர் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நல சங்கம் சார்பில், 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. சங்க மாவட்ட தலைவர் செல்வம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.