/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜன.,3ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
ஜன.,3ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜன 01, 2025 01:21 AM
தர்மபுரி, ஜன. 1-
'தர்மபுரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 3ம் தேதி நடக்கிறது' என, ஆர்.டி.ஓ., காயத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது: தர்மபுரி மாவட்டத்துக்கு உட்பட்ட, தாலுகா அளவிலான விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும், 3ல் காலை, 11:00 மணிக்கு, தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடக்கிறது. தர்மபுரி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறி தீர்வு காணலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.