/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காட்டெருமைகளால் பயிர்கள் நாசம் மலைக்கிராம விவசாயிகள் வேதனை
/
காட்டெருமைகளால் பயிர்கள் நாசம் மலைக்கிராம விவசாயிகள் வேதனை
காட்டெருமைகளால் பயிர்கள் நாசம் மலைக்கிராம விவசாயிகள் வேதனை
காட்டெருமைகளால் பயிர்கள் நாசம் மலைக்கிராம விவசாயிகள் வேதனை
ADDED : டிச 19, 2024 01:00 AM
அரூர், டிச. 19-
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரிமலை கடல் மட்டத்திலிருந்து, 3,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சித்தேரி மலை பஞ்.,ல், 62 கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வரும் காட்டெருமைகள் பயிர்களை மேய்வதுடன், அவற்றை நாசம் செய்து செல்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: பீன்ஸ், நெல், ராகி, சாமை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். பயிர் நடவு செய்வது முதல், அதை காப்பாற்றி அறுவடை செய்வது வரை, பெரும் சவாலாக உள்ளது. காட்டெருமைகள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்க முடியாத சூழல் உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. காட்டெருமைகளை தடுக்க நிலத்தை சுற்றி துணிகள் கட்டுதல், பொம்மைகளை வைப்பது, இரவில் குடில் அமைத்து தீப்பந்தத்துடன் காவல் இருப்பது என, விவசாயிகள் மேற்கொண்ட எந்த யுக்தியும் எடுபடவில்லை. கூட்டம், கூட்டமாக வரும் காட்டெருமைகள் பயிர்களை மேய்ந்து விட்டு செல்கின்றன. மேலும், காட்டெருமைகளை விரட்டினால், அவை திருப்பி தாக்க வருவதால், விவசாயிகள் பீதியுடன் நடமாட வேண்டியுள்ளது. இதுகுறித்து, வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேதமான பயிர்களுக்கு வனத்துறை சார்பில், இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. இதற்கு எந்த நிரந்தர முடிவும் எடுக்க முடியாமல் அனைத்து விவசாயிகளும், வேதனைப்பட்டு வருகிறோம். விவசாய பயிர்களை அழிக்கும் வனவிலங்குகளை கட்டுப்படுத்தவும், நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.