sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மானிய விலையில் புதிய மின்மோட்டார் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

/

மானிய விலையில் புதிய மின்மோட்டார் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

மானிய விலையில் புதிய மின்மோட்டார் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

மானிய விலையில் புதிய மின்மோட்டார் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : நவ 24, 2025 01:02 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு, மானிய விலையில் புதிய மின்மோட்டார் வழங்கப்படுவதாக, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி-னருக்கு, வேளாண் பொறியியல் துறை மூலம், பழைய மின்-மோட்டாருக்கு பதில், மானிய விலையில் புதிய மின்மோட்டார் மாற்றும் திட்டத்திற்கு நடப்பாண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள், அரசு மானி-யத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்தவராக இருக்க வேண்டும். மேலும், தங்கள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், ஜாதிச்சான்று, மார்பளவு புகைப்படம், ஆதார்-கார்டு ஜெராக்ஸ் மற்றும் வங்கி புத்தக ஜெராக்ஸ் ஆகியவற்-றுடன், வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு, விண்ணப்பங்களை அலுவலகத்தில் நேரடியாக கொடுத்து பதிவு செய்து பயனடையலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, 15,000 ரூபாய் அல்லது மின்-மோட்டார் விலையில், 50 சதவீதம் என, எது குறைவாக உள்-ளதோ, அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

எனவே விவசாயிகள், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் ஓசூரில், ராயக்கோட்டை சாலையில் சானசந்-திரம் பகுதியிலுள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்-பொறியாளர் அலுவலகங்களை நேரடியாகவோ அல்லது 94430 83493 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us