/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தோட்டக்கலைத்துறையில் மானியம் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு
/
தோட்டக்கலைத்துறையில் மானியம் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு
தோட்டக்கலைத்துறையில் மானியம் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு
தோட்டக்கலைத்துறையில் மானியம் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 28, 2025 01:31 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் இந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை:
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், இந்த நிதியாண்டில் பல்வேறு திட்டங்களுக்கு, 16.71 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது.
இதில் தோட்டக்கலை பயிர்களுக்கு பரப்பு விரிவாக்கம், மா பழைய தோட்டம் புதுப்பித்தல், பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறைகள், ஒருங்கிணைந்த அறுவடை பின்செய் நேர்த்தி என, பல்வேறு வகையான இனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
அதன்படி, ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை, சிப்பம் கட்டும் அறை, முன் குளிரூட்டும் அறை, பாலீத்தீன் பசுமைக்குடில், நிழல்வலைக் கூடாரம், நீர் சேகரிப்பு அமைப்பு, மண்புழு உரக்கூடாரம் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.
தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உரிய ஆவணங்களுடன், www.tinhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளத்தில் புதிவு செய்து கொள்ளலாம்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் கிருஷ்ணகிரி, 80727 04544, காவேரிப்பட்டணம், 79046 64726, பர்கூர், 96777 87102, மத்துார், 88386 35331, ஊத்தங்கரை, 80723 76969, வேப்பனஹள்ளி, 99529 01906, சூளகிரி, 97862 17220, ஓசூர், 99001 70810, தளி, 63749 00738, கெலமங்கலம், 63749 00738 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.