sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விமான நிலையம் அமைக்க கூடாது இ.பி.எஸ்.,சிடம் விவசாயிகள் மனு

/

விமான நிலையம் அமைக்க கூடாது இ.பி.எஸ்.,சிடம் விவசாயிகள் மனு

விமான நிலையம் அமைக்க கூடாது இ.பி.எஸ்.,சிடம் விவசாயிகள் மனு

விமான நிலையம் அமைக்க கூடாது இ.பி.எஸ்.,சிடம் விவசாயிகள் மனு


ADDED : ஆக 13, 2025 05:54 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே விமான நிலையம் அமைக்க கூடாது என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சிடம், விவசாயிகள் சார்பில் மனு வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி ஹில்ஸ் ஓட்-டலில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., சிறு, குறு தொழில் நிறுவன பிரநிதிகள், விவசாயிகள், வணிகர் சங்கம், தனியார் பள்ளி பிரதிநிதிகள், பில்டர் ஓனர்ஸ் அசோசியேஷன், இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு மற்றும் தனியார் பஸ் உரி-மையாளர்களை சந்தித்து, கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெற்றார்.அதில் விவசாயிகள் சார்பில் அளித்த மனுக்களில் கூறியிருப்பதா-வது: ஓசூரில், 2,000 ஏக்கரில் விமான நிலையம் அமைக்க, பேல-கொண்டப்பள்ளி, முதுகானப்பள்ளி, கலுகொண்டப்பள்ளி, கோப-னப்பள்ளி, ஒசபுரம், முகலுார், அஞ்செட்டிப்பள்ளி ஆகிய பகுதி-களில், நிலம் கையகப்படுத்த ஏற்பாடு நடக்கின்றன. அங்கு சிறு, குறு விவசாயிகள் உள்ளதால், நிலத்தை கையகப்படுத்தக் கூடாது. அப்பகுதியில் விமான நிலையம் அமைக்கக்கூடாது. சாட்டிலைட் டவுன் ரிங்ரோட்டிற்கு, கர்நாடகாவில் ஏக்கருக்கு, 2 கோடி ரூபாயும், தமிழக எல்லையில், 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படு-கிறது. சந்தை மதிப்பில், சரியான விலை நிர்ணயம் செய்து, இழப்-பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கெலவரப்பள்ளி அணை நீரை சுத்தம் செய்து, தளி, தேன்கனிக்கோட்டை, கெல-மங்கலம், ஓசூர், சூளகிரி, ராயக்கோட்டை, வேப்பனஹள்ளியி-லுள்ள விவசாய நிலங்களுக்கு, பாசனத்திற்கு வழங்க வேண்டும். ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வாணி ஒட்டு திட்-டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். காட்டுப்பன்றி-களை சுட, அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தனர்.

விவசாயிகள் சார்பில், இ.பி.எஸ்.,சிற்கு தங்க நிறத்திலான ஏர் கலப்பை மற்றும் மண்வெட்டி பரிசாக வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us