/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யானைகளால் வாழை நாசம் விவசாயிகள் சோகம்
/
யானைகளால் வாழை நாசம் விவசாயிகள் சோகம்
ADDED : ஜூலை 28, 2025 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகம், நொகனுார் காப்புக்காட்டில், ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனியாக உள்ளன. இவை இரவில் வனத்தை ஒட்டிய கிரா-மங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு இரு யானைகள், கேரட்டி கிராமத்தில் புகுந்தது.
விவசாயிகள் கோபால், கேசவனின் வாழை தோட்டத்தில் புகுந்-தன. தின்றும், மிதித்தும், 300க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசமாக்கின. இதனால் விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர். தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சேதமான வாழை மரங்க-ளுக்கு, உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.