/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாசனத்திற்கு தண்ணீர் திறந்த அன்றே நிறுத்தியதால் விவசாயிகள் அதிர்ச்சி
/
பாசனத்திற்கு தண்ணீர் திறந்த அன்றே நிறுத்தியதால் விவசாயிகள் அதிர்ச்சி
பாசனத்திற்கு தண்ணீர் திறந்த அன்றே நிறுத்தியதால் விவசாயிகள் அதிர்ச்சி
பாசனத்திற்கு தண்ணீர் திறந்த அன்றே நிறுத்தியதால் விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : டிச 14, 2024 01:30 AM
போச்சம்பள்ளி, டிச. 14-
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாரூர் பெரிய ஏரியிலிருந்து நீர்வளத்துறை சார்பில், கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாயிகளில், இரண்டாம் போக சாகுபடிக்கு நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் சரயு, பர்கூர் எம்.எல்.ஏ., மதியழகன் மற்றும் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் தண்ணீர் திறந்து வைத்தனர். இதன் மூலம், 2,397 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் தொடர்ந்து, 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கீழ்குப்பம், ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி உள்ளிட்ட பஞ்சாயத்து விவசாயிகள் பயன் பெறுவதற்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அன்று இரவே கிழக்கு பிரதான இரட்டை மதகை அடைத்து தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கீழ்குப்பம், ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி பஞ்.,பகுதி விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து, பாரூர் நீர்வளத்துறை உதவி பொறியாளர் வெங்கடேசன் கூறுகையில்,'' வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்திருப்பதாகவும், அதனால் பாரூர் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் வீணாகும் என்பதை கருதி, ஒரு சில விவசாயிகள் மொபைல் போனில் தொடர்பு கொண்டு திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்த வேண்டும் என கூறியதால், தண்ணீர் நிறுத்தப்பட்டது. மீண்டும் உடனடியாக திறக்கப்படும்,'' என்றார்.