/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அடிக்கடி மின் தடையால் விவசாயிகள் அவதி கோடையில் பயிரை காப்பாற்ற போராட்டம்

ADDED : ஏப் 07, 2024 03:27 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளி, பையர்நாயக்கன்பட்டி, பெரியப்பட்டி, கோட்டப்பட்டி ஆகிய பஞ்.,ல் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையாக மின்சாரம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
நரிப்பள்ளி, கோட்டப்பட்டி சுற்று வட்டாரத்தில் கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என அடிக்கடி மின் தடை செய்வது அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே, கடும் வறட்சி நிலவும் நேரத்தில் கோடையில் சாகுபடி செய்துள்ள நெல், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர். மேலும், குறைந்தழுத்த மின்சாரம் வழங்குவதால் மின்மோட்டார்கள் பழுதடைகிறது. இதற்கு தீர்வாக மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின் பற்றாக்குறை மற்றும் மின் தடை பிரச்னைகளை சரிசெய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.