/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எரிவாயு குழாய்களை மாற்றி பதிக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்
/
எரிவாயு குழாய்களை மாற்றி பதிக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்
எரிவாயு குழாய்களை மாற்றி பதிக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்
எரிவாயு குழாய்களை மாற்றி பதிக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்
ADDED : மார் 10, 2024 03:36 AM
ஓசூர்: கெலமங்கலம் அருகே, எரிவாவு குழாய்களை மாற்றி பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு, கெயில் நிறுவனம் சார்பில், எரிவாயு குழாய் அமைக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எரிவாயு குழாய் பாதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கெலமங்கலம் அடுத்த டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் ஒன்றரை ஆண்டுக்கு முன், அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி, விவசாய நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்நிலையில், கெயில் நிர்வாகம் ஏற்கனவே சில விவசாய நிலங்களில் பதித்திருந்த குழாய்களை நேற்று வெளியே எடுத்து, அதே விவசாய நிலத்தில் ஓரமாக பதிக்க முயன்றது. அதேபோல், தங்களது நிலத்திலும் ஓரமாக அமைக்க வேண்டும் என, பல்வேறு விவசாயிகள் தெரிவித்தனர்.
இல்லாவிட்டால், எரிவாயு குழாய் கொண்டு செல்வதாக கொடுத்துள்ள வரைபடத்தின் உள்ளதை போல் கொண்டு செல்லுங்கள். அதை மாற்ற கூடாது; இல்லாவிட்டால், தங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என கூறி விவசாயிகள் குடும்பத்துடன் விவசாய நிலத்தில் திரண்டனர். கெலமங்கலம் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் முனியப்பா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாத நிலையில், டி.கொத்தப்பள்ளி கிராம பஸ் ஸ்டாப் அருகே நேற்றிரவு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கெயில் நிறுவன அதிகாரிகள் எரிவாயு குழாய் பதிப்பதை தற்காலிகமாக கைவிட்டு சென்றனர்.

