தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஆக 24, 2026 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே பூஞ்சோலை கிரா-மத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில், பலர் வீடு கட்டி குடியி-ருந்து வருகின்றனர். விவசாயிகள் நிலம் பயிர் சாகுபடி செய்கின்-றனர்.

இந்த நிலத்தை அஞ்செட்டி ஒன்றிய அலுவலகம் கட்ட, மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. அதனால் அங்கு குடியிருப்பவர்-களை அப்புறப்படுத்த, வருவாய்த்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.இதை கண்டித்து, பூஞ்சோலை கிராமத்தில், மா.கம்யூ., கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டம் நடந்தது. வட்ட செயலாளர் குமாரவ-டிவேல் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் பிரகாஷ், மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்-தினர். அப்போது, பூஞ்சோலை கிராமத்தில், பொதுமக்களை அப்-புறப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்-பட்டது. ஆனால், அதிகாரிகள் உறுதியான முடிவை அறிவிக்கா-ததால், நேற்று மாலை, 6:00 மணியை கடந்தும் போராட்டம்

நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us