ADDED : ஆக 24, 2026 01:50 AM
அ நிறம் | அளவு
காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஸ்டேஷன் எஸ்.ஐ., முருகபெருமாள் மற்றும் போலீசார், கொசமேடு பகு-தியில் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரு மினி டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, சிறிது துாரத்திற்கு முன்பாக லாரிகளை நிறுத்தி விட்டு டிரைவர்கள் தப்பியோடினர்.
சந்தேகத்தின் பேரில் லாரிகளில் சோதனை செய்தபோது, தலா, 2 யூனிட் சரளை மண்ணை கடத்தி செல்வது தெரிந்தது. அதனால் இரு லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய லாரி டிரைவர்களான, கிருஷ்ணகிரி அடுத்த மிட்டஹள்ளி அருகே அங்கினம்பட்டியை சேர்ந்த சஞ்சீவகுமார், 52, பாரதகோவில் பகு-தியை சேர்ந்த பிரகாஷ், 39, ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
