ADDED : ஜூன் 08, 2026 05:10 AM
அ நிறம் | அளவு
உத்தனப்பள்ளி; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர், 47 வயது பெண். இவரும், அதே பகுதியை சேர்ந்த பைரப்பா, 57, என்பவரும் உறவினர்கள். கடந்த, 1ம் தேதி காலை, 7:00 மணிக்கு, ஓலை கொட்டகையில் தான் குளிப்-பதை பைரப்பா பார்த்ததாக, குற்றம்சாட்டிய அப்பெண், அவரது மகன் முரளி, 26, என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து, அவருடன் முரளி வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில், பைரப்பா மற்றும் அவரது மகன் முரளி ஒன்றாக சேர்ந்து, தன்னை திட்டி மானபங்கப்ப-டுத்தி மிரட்டியதாக, அப்பெண் உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக, பைரப்பா மற்றும் முரளி ஆகியோரை, நேற்று முன்தினம் உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.
