ADDED : ஜூன் 08, 2026 05:10 AM
அ நிறம் | அளவு
கந்திக்குப்பம்; கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் அருகே பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி வி.ஏ.ஓ., டேனியல் மற்றும் வருவாய்த்
துறையினர்,
அப்பகுதியில் உள்ள தனியார் கிரஷர் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளியிலிருந்து, சத்தலப்பள்ளி பகுதிக்கு, ஒரு யூனிட் மண் கொண்டு செல்வது தெரிந்தது. டிராக்டரை பறி-முதல் செய்த அதிகாரிகள், கந்திக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., டேனியல் புகார் படி, டிராக்டர் டிரைவர் சுரேந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
