/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் கவுன்சிலர் உயிரிழப்பு
/
அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் கவுன்சிலர் உயிரிழப்பு
அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் கவுன்சிலர் உயிரிழப்பு
அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் கவுன்சிலர் உயிரிழப்பு
ADDED : ஜன 09, 2025 08:04 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி நித்யா, 36. காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., 7வது வார்டு, தி.மு.க., கவுன்சி-லராக இருந்தார். இவர்களுக்கு, 3 குழந்தைகள்.கடந்த டிச., 26 ல் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நித்யா அனுமதிக்கப்-பட்டார்.
அவருக்கு கர்ப்பபை நீர்கட்டியும் இருந்துள்ளது. நீர்கட்-டியை அகற்றிய பின் தான், குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்ய வேண்டுமென டாக்டர்கள் கூறினர். அதன்படி நித்யாவுக்கு கடந்த, 3ல், முதலில் நீர்கட்டியை அகற்ற அறுவை சிகிச்சையும், அதன்பின் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் நடந்தது. தொடர்ந்து அவருக்கு லேசான ரத்தப்போக்கு மற்றும் அதிக ரத்த அழுத்தத்தால், தொடர் சிகிச்சையில் இருந்தவர், நேற்று முன்-தினம் இரவு உயிரிழந்தார்.இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ''நித்யாவுக்கு கர்ப்பபை நீர்-கட்டி இருந்தது. அதை அகற்றி, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல்நலம் தேறிவந்த நிலையில் ரத்த அழுத்தம் அதிகமாகியது. அதற்குரிய அவசர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து விட்டார்,'' என்றனர். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

