நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், தளி சாலையில், டி.வி.எஸ்., நகரிலுள்ள பட்டு வளர்ச்சித்-துறை அலுவலகம் அருகே, எல்லம்மாதேவி மற்றும் கைலாசநா-தேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, காலபைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இதன் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது. கங்கை பூஜை, கணபதி பூஜை, வாஸ்து ஹோமம் உள்ளிட்ட பல்-வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, வேத பாராயணம், கலச ஸ்தாபனம் நடந்தது. தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க காலபைரவர் சன்னதி கும்பாபிஷேகம் நடந்தது.ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சென்னீரப்பா, உறுப்பினர்கள் சரோஜா, நாகராஜ் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

