/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாரண்டப்பள்ளியில் வயல் தின விழா
/
பாரண்டப்பள்ளியில் வயல் தின விழா
ADDED : மே 23, 2025 01:04 AM
கிருஷ்ணகிரி, பர்கூர், பாரண்டப்பள்ளி கிராமத்தில், வேளாண் துறை மாநில விரிவாக்க திட்டங்களின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் (அட்மா), வயல் தினவிழா பயிற்சி வழங்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் சிவநதி பயிற்சியை துவக்கி வைத்து, உழவன் செயலியின் பயன்கள், திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள், இயற்கை விவசாயம் மற்றும் வேளாண் துறையில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.
வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கலா, அட்மா திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். பையூர் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் கிருஷ்ணவேணி, அங்கக வேளாண்மை, இயற்கை விவசாயம், மண்புழு உரம் தயாரித்தல், பஞ்சகாவியா தயாரித்தல், பூச்சி விரட்டி, மீன் அமிலம், ஜீவாமிர்தம், அமிர்த கரைசல், கன ஜீவாமிர்தம், பசுந்தாள் உரம் தயாரித்தல் முறை குறித்து எடுத்துரைத்தார். எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய பேராசிரியரும், தலைவருமான சுந்தர்ராஜன், அனைத்து பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, விதை நேர்த்தியின் பயன்கள் குறித்து கூறினார்.
அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர்கள் (மண்ணியல்) குணசேகரன், முகமது இஸ்மாயில், துணை வேளாண் அலுவலர் வேடியப்பன் ஆகியோர் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.