/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வரலாறு பற்றிய புரிதலை ஏற்படுத்த 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சுற்றுலா
/
வரலாறு பற்றிய புரிதலை ஏற்படுத்த 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சுற்றுலா
வரலாறு பற்றிய புரிதலை ஏற்படுத்த 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சுற்றுலா
வரலாறு பற்றிய புரிதலை ஏற்படுத்த 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சுற்றுலா
ADDED : டிச 31, 2024 07:04 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் வருடாந்திர செயற்குழு கூட்டம், நேற்று மாவட்ட அருங்காட்சியகத்தில் நடந்தது. தலைவர் நாராயணமூர்த்தி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், 2 மாதங்களுக்கு ஒரு முறை, 'வரலாறும் வடையும்' என்ற கலந்துரையாடல் சந்திப்பு நடத்த வேண்டும். ஆய்வுக்குழுவின் முதலாவது மரபு நடையை மகளிர் தினத்தன்று முழுக்க பெண்களைக் கொண்டு நடத்த வேண்டும். மாணவர்களிடம் வரலாற்று ஆர்வத்தையும், வரலாறு பற்றிய புரிதலையும் ஏற்படுத்த, 3 மாதங்களுக்கு ஒரு முறை, 8ம் வகுப்பு மாணவர்களை தேர்ந்தெடுத்து, ஒரு நாள் வரலாற்று சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓய்வு பெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் அலுவலர் பரந்தாமன், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.