/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறுபான்மையின மாணவ, மாணவியர் வெளிநாடு சென்று படிக்க நிதியுதவி
/
சிறுபான்மையின மாணவ, மாணவியர் வெளிநாடு சென்று படிக்க நிதியுதவி
சிறுபான்மையின மாணவ, மாணவியர் வெளிநாடு சென்று படிக்க நிதியுதவி
சிறுபான்மையின மாணவ, மாணவியர் வெளிநாடு சென்று படிக்க நிதியுதவி
ADDED : அக் 03, 2025 01:33 AM
கிருஷ்ணகிரி, சிறுபான்மையின மாணவ, மாணவியர் வெளிநாடு சென்று படிக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு, 2025-2026ம் நிதியாண்டில், இஸ்லாமிய சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக, வெளிநாடு சென்று படிக்கும், 10 இஸ்லாமிய மாணவர்களுக்கு, தலா, 36 லட்சம் ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க, 3.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர், 2025-2026ம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க, உலகளாவிய தரவரிசையில் முதல், 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம், 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டப்படிப்பில், 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி பெற்று, முதுகலை பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெற்றவராக இருக்க வேண்டும்.
இதில் விண்ணப்பிக்க, www.bcmbcmw.tn.gov.in welfschemes-_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு வரும், 31க்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.