/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு நிதியுதவி
/
விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு நிதியுதவி
ADDED : பிப் 23, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், திருப்பதிவேலி குடியிருப்பு அருகில் வசிப்பவர், சுரேஷ்கண்ணன்.
இவர், கடந்த, 5ல் தன், 14 வயது மகன், 12 வயது மகளை டூவீலரில், அந்திவாடியில் அவர்கள் படிக்கும் அரசு பள்ளியில் விட சென்றுள்ளார். அப்போது எதிரில் வந்த பஸ் மோதியதில், மாணவர்கள் இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களுக்கு எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை. இதையறிந்த ஓசூர் மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, நேற்று அந்த குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக, 35,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.