/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நோ பார்க்கிங்'ல் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்
/
நோ பார்க்கிங்'ல் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்
ADDED : டிச 02, 2025 02:29 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தேன்கனிக்கோட்டை சாலையோரம் சப்-கலெக்டர் அலுவலகம் இயங்குகிறது. இதன் முன்புள்ள சாலையில், வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். அதனால், சப்-கலெக்டர் மற்றும் பொதுமக்கள் அலுவலகத்திற்குள் செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, சப்-கலெக்டர் அலுவலகம் முன், நோ பார்க்கிங் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை போர்டு வைத்துள்ளனர்.
அதையும் மீறி வாகனங்களை பார்க்கிங் செய்து சென்று விடுகின்றனர். இதனால் நேற்று சப்-கலெக்டர் அலுவலகம் முன் ரோந்து சென்ற போக்குவரத்து போலீசார், 'நோ பாக்கிங்' பகுதியில் நின்றிருந்த மூன்று கார்களுக்கு தலா, 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதுபோன்ற நடவடிக்கை தொடரும் என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

