/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கேனிலிருந்த பெட்ரோல் கசிந்து தீ விபத்து; விசைத்தறி உரிமையாளர் உடல் கருகி பலி

ADDED : டிச 11, 2024 07:00 AM
ஓசூர்: கெலமங்கலத்தில், வீட்டின் அறையில் கேனிலிருந்த பெட்ரோல் கசிவால் ஏற்பட்ட தீயில் சிக்கிய விசைத்தறி உரிமையாளர், உடல் கருகி பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் கணேஷ் காலனியை சேர்ந்தவர் வெங்கடேசப்பா, 50. விசைத்தறி கூடம் வைத்துள்ளார். இவரது மனைவி ராணி, 47. கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் டவுன் பஞ்.,ல் செயல் அலுவலராக உள்ளார். இவர்களது, 20 வயது மகன், பெங்களூருவில் பி.காம்., மூன்றாமாண்டு படிக்கிறார். வெங்கடேசப்பா தன் வீட்டின் தரைதளம் மற்றும் முதல் தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார். முதல் தளத்திலுள்ள ஒரு அறையில் தனியாக தங்கியிருந்த அவர், 2வது தளத்திலுள்ள அறைக்கு குளிக்க சென்றவர், மனைவி ராணியிடம் மொபைல்போனில் பேசியபடி புகை பிடித்துள்ளார். அப்போது பயங்கர சத்தத்துடன் அறையில் தீ பிடித்துள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து, தீயில் கருகிய வெங்கடேசப்பாவை மீட்டு, கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது அங்கு அவர் உயிரிழந்தார்.
கெலமங்கலம் போலீ சார் விசாரணையில், வெங் கடேசப்பா வாகனங்களுக்கு போட கேனில் வாங்கி வைத்திருந்த பெட் ரோல் கசிந்திருந்ததும், புகை பிடிக்கும் போது, தீ பட்டு பெட்ரோல் கேன் வெடித்ததில் தீப்பிடித்து, அவர் உடல் கருகி இறந்ததும் தெரியவந்தது.