/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பேரிடர் மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு துறை செயல்விளக்கம்
/
பேரிடர் மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு துறை செயல்விளக்கம்
பேரிடர் மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு துறை செயல்விளக்கம்
பேரிடர் மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு துறை செயல்விளக்கம்
ADDED : செப் 24, 2024 01:29 AM
ஓசூர்: வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, ஓசூர் வருவாய்த்துறை மற்றும் தீயணைப்-புத்துறை சார்பில், ஓசூர் தாலுகா அலுவலக வளாகத்தில், நேற்று மதியம் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் காயமடையும் நபர்கள் மற்றும் வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை எவ்வாறு மீட்டு ஆம்-புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பது. தீ விபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும். வீடுகளில் ஏற்படும் தீயை எவ்வாறு அணைக்கலாம். பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கையாக எவ்வாறு இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது என, தீயணைப்பு வீரர் ராஜா தலைமையில், தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம் செய்து காண்பித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஓசூர் தாசில்தார்
சின்னசாமி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.